2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அனர்த்த ஒத்திகை பயிற்சி

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்


மட். ஆனைகட்டியவெளி நாமகள் வித்தியாலயம், மட். வீரக்கட்டு மயிலவெட்டுவான் அரச தமிழ்க் கலவன் பாடசாலை, மட். பங்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை ஆகியவற்றின் மாணவர்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அனர்த்த ஒத்திகை பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவ்த சில்ரன் நிறுவனத்தின் டிப்பிகோ -  7 ஊடாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக்கிளையுடன் இணைந்து மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 16 பாடசாலைகளில் பாடசாலை மட்ட அனர்த்த ஒத்திகை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக்கிளை, சேவ்த சில்ரன் நிறுவனம் ஆகியவற்றின் உத்தியோகஸ்தர்களும் வளவாளர்களாக கலந்துகொண்டு அனர்த்த ஒத்திகையை நடத்தினர்.

அனர்த்தத்தின்போது எவ்வாறு நடந்துகொள்வது என்பது தொடர்பில் செயன்முறைகளுடன் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.   



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X