2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

செயன்முறைப்பயிற்சியும் ஊர்வலமும்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்   


உலக சுகாதார தினம் மற்றும் சர்வதேச கை கழுவும் தினத்தையொட்டி மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர் ஊர்வலம் மற்றும் செயன்முறைப் பயிற்சியும் ஏறாவூரில் இன்று புதன்கிழமை (15) நடைபெற்றன.

உலக சுகாதார தினம், சர்வதேச கை கழுவும் தினமும் ஒக்டோபர் 15 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றன.

பாட இணைப்பாளர் எச்எம்ஏ.மாஜித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மாக்கான் மாக்கார்  மகா வித்தியாலயம,; மிச்நகர் அரசினர் முஸ்லம் கலவன் பாடசாலை, அல்- ஜுப்ரிய்யா வித்தியாலயம், அல்- முனீறா பாலிகா வித்தியாலயம் மற்றும் அல் அஸ்ஹர் வித்தியாலயம் ஆகிய ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர்.

சுத்தம் மற்றும் சுகாதாரப் பழக்கவழக்கங்களின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தும் பல்வேறு வாசகங்களைக் கொண்ட பதாதைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர்.

ஏறாவூர் கோட்டக்கல்வி அதிகாரி ஐ.எல்.எம்.மஹ்ரூப், உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்நஸீ;, சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் ஏ.எம்.றபீக் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம்.தாரிக் மற்றும் பொதுச்சகாதார பரிசோதகர் ஆர்.இன்பராஜா ஆகியோர் அடிப்படை சுகாதார பழக்க வழக்கங்களைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு செய்முறைப்பயிற்சியுடனான அறிவுரைகளை வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X