2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'பெண்களுக்கு எதிரான வன்முறை, சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவர்கள் மீது சட்டம் கடுமையாக்கப்படல் வேண்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தில்; ஈடுபடுவர்கள் மீது சட்டம் கடுமையாக்கப்படல் வேண்டும் என காத்தான்குடி நகரசபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.

காத்தான்குடி முதலாம் குறிச்சியில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை (15)  நடைபெற்ற சிறுவர் துஷ்;பிரயோகத்தை இல்லாது செய்வதற்கான விழிப்புணர்வுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தில்; ஈடுபடுபவர்கள் மீது சட்டம் கடுமையாக்கப்படல் வேண்டும். சாதாரண சட்ட நடவடிக்கையால்,  இவற்றில் ஈடுபடுபவர்கள் தப்பி விடுகின்றனர். இப்படியானவர்கள் மீது சட்டம் கடுமையாக்கப்படும்போது, இவ்வாறான சம்பவங்களை சமூகத்தில் குறைக்கமுடியும்.

சிறுவர்களை வெளியில் அனுப்பும்போது பெற்றோர், சிறுவர்கள் மீது கவனமாக இருக்க வேண்டும். தமது உறவு முறையானவர்களுடன் தமது சிறு பிள்ளைகளை அனுப்பும்போதும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். இன்று உறவு முறையானவர்களும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வதை அன்றாடம் கேள்விப்படுகின்றோம்.

உறவு முறையானவர்களுடனும் பிள்ளைகளை வெளியில் அனுப்பும்போது, அவர்கள் விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும். தமது பிள்ளை எங்கு செல்கின்றது?  எதற்காக செல்கின்றது? யாருடன் செல்கின்றது? என்ற விடயங்களில் பெற்றோர்; கவனமெடுக்க வேண்டும்.
எமது பெண் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் காத்தான்குடியில் சிறுமியொருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அச்சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியது. அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது சட்டம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறான ஒரு சம்பவம் கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடியில் இடம்பெற்றாக நாம் அறிகின்றோம். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடந்துவிடாமல் நாம் சமூகச் சூழலில் அவதானமாக இருக்கவேண்டும்' என்றார்.

இந்தக் கூட்டத்தல் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஐ.பி.மங்கள, சிவில் பொறுப்பதிகாரி எஸ்.செல்வராசா, பெண் பொலிஸ்; அதிகாரி திருமதி ஆர்.விமலேஸ்வரி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X