2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் ஆறாம் கட்டம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நிறைவான இல்லம் வளமான தாயகம் எனும் வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் ஆறாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை நாடு பூராவும் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷ மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் செயற்படுத்தப்பட்டுவரும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முறக்கொட்டாஞ்சேனை கிராமத்தில்  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் தலைமையில் நடைபெறவுள்ளதாக வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகஸ்தர் ஜே.ஏ.மனோகிதராஜ் தெரிவித்தார்.

அன்றையதினம் நாடு பூராகவுமுள்ள 14,022 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளில் இதன் ஆறாம் கட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 345 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது,

முறக்கொட்டாஞ்சேனை கிராமத்தில்  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் தலைமையில் நடைபெறும் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் குடும்ப பொருளாதார மற்றும் போஷாக்கை மேம்படுத்துவதற்கான 25 இலட்சம்  மனைப்பொருளாதார அலகுகளை வலுவூட்டும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், அன்றையதினம் மரக்கண்டுகள், பழமரக்கண்டுகள் மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், அன்றையதினத்தில் சுபநேரமான காலை 10.7 க்கு ஆறாம் கட்டம்  ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X