2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காணாமல்போன தந்தையை கண்டுபிடித்துத் தரக்கோரி முறைப்பாடு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலம்பாவெளிப் பகுதியில் காணாமல்போன தனது தந்தையை கண்டுபிடித்துத் தருமாறு மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று புதன்கிழமை (15) முறைப்பாடு செய்துள்ளதாக அவரது மகள் தெரிவித்தார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான் குடியிருப்பு வி.சி.றோட் கொலனியைச் சேர்ந்த ராமசாமி ஜோசப் (வயது 73) என்பவர் கடந்த 31.12.2013 அன்றிலிருந்து  காணாமல் போனதாகவும் இது விடயமாக உடனடியாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும்  ஆயினும்,  தேடியபோதும் தந்தையை இதுவரையில்; கண்டுபிடிக்க முடியவில்லை எனவும்  தனது முறைப்பாட்டில் மகள் தெரிவித்துள்ளார்.

சம்பவ தினத்தன்று 31.12.2013 காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற தந்தை இதுவரை என்ன ஆனார் என்று தெரியவில்லை எனவும் அவர் கூறினார்.

இந்த  முறைப்பாடு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை முன்னெடுக்கும் என  மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X