2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 17 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்,எஸ்.பாக்கியநாதன் 


தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்னெருவில் பிரதேச சபைக்கு உட்பட்ட களுதாவளை பொதுநூலகத்தில் பல்வேறு நிகழ்வுகள் வாசகர் வட்டத் தலைவர் ஆர்.ஞானசேகரனின்  தலைமையில் தயார்படுத்தப்பட்டுள்ளதாக களுதாவளை பொதுநூலகத்தின் நூலக உதவியாளர் சிறிதாரணி சுதாகரன் தெரிவித்தார்.

தேசிய வாசிப்பு மாதம் ஒக்டோபர் மாதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை (16) மட். களுதாவளை மகாவித்தியாலய மாணவர்களை நூலகத்துக்கு அழைத்துவந்து  வாசிப்பில் ஈடுபடுத்தியதுடன்,  களுதாவளை முன்பள்ளி மாணவர்களுக்கு இந்நூலக உத்தியோகஸ்தர்களால் நீதிக் கதைகளும் சொல்லப்பட்டன.

எதிர்வரும் 25ஆம் திகதி மட். களுதாவளை மகாவித்தியாலயம், மட். களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயத்திலும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வாசிப்பு போட்டி நடத்தப்படவுள்ளது.

இதில் 6,7,8ஆம் தரங்களில் பயிலும் மாணவர்களுக்கு முதலாம் பிரிவாகவும் 9,10,11ஆம் தரங்களில் பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பிரிவாகவும் 12,13ஆம் தரங்களில் பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பிரிவாகவும் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதலாம் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் என தலா மூவர் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுப்பொருட்களும் வழங்கப்படவுள்ளன.

எதிர்வரும் 26 ஆம் திகதி இந்நூலகத்தில் வாசகர் வட்டம் மற்றும் பொதுமக்களும் இணைந்து சிரமதானத்தில் ஈடுபடவுள்ளதாகவும்  களுதாவளை பொதுநூலகத்தின் நூலக உதவியாளர் சிறிதாரணி சுதாகரன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கோடு மட்டக்களப்பு மாநகர சபையினால் ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் நூலக நடமாடும் சேவை நேற்று வியாழக்கிழமை (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X