2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இரத்ததான நிகழ்வு

Thipaan   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பு பயினியர் வீதியில் உள்ள அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (18)காலை நடைபெற்றது.

'எனக்கும் உலகில் உயிர்வாழ ஆசை,எங்கள் உயிரைக்காப்பாற்றுங்கள்' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த இரத்தான நிகழ்வில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியினர் இரத்தத்தை சேகரித்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இரத்த பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில் வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவினால் இந்த இரத்தானமுகாம் நடத்தப்பட்டுவருகின்றது. இன்று காலை முதல் சுமார் 50 பேர் வரை இரத்ததானம் செய்தனர்.

இந்த இரத்ததான முகாமில் பொதுமக்கள், பொலிஸார், வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் உறுப்பினர்கள் பங்குபற்றினர்.

தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவும் வகையில் இந்த இரத்தான முகாம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X