2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

முதுமானி கற்கை நெறியினை வார இறுதி நாட்களில் நடாத்துமாறு கோரிக்கை

George   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

கல்வி முதுமானி (M.ED)  கற்கை நெறியினை வார இறுதி நாட்களில் நடாத்துவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இதுதொடர்பாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரிடம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பி.உதயரூபன் தலைமையிலான குழுவினர் கடிதம் ஒன்றினை கையளித்துள்ளனர்.

இக் கடிதத்தில், கல்வி முதுமாணி  கற்கை நெறிக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தில் தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான பாடநெறியினை வார இறுதி நாட்களில் நடாத்துவதற்கு ஆவன செய்யுங்கள்.

1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் 46 (6) (i)இ (எiii) இன் படி கிழக்கு பல்கலைக்கழக மூதவை தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதற்கு நியாயத்தன்மையான தீர்மானமொன்றினை எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

அதே நேரம், கல்வி அமைச்சின் 26/2013 சுற்றறிக்கையின்  2.3,4 இன் படி தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும்,  கல்வியின் தரம் மற்றும் பண்புசார் விருத்தியை தொடர்;ச்சியாக முன்னெடுப்பதற்கும் மற்படி கல்வி நெறியினைத் தொடர்வதற்கு நியாயத் தன்மையானதும் நடுநிலைத் தன்மையானதுமான தகுந்த தீர்மானமொன்றினை எடுப்பதற்கு ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.  ஏனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், மாகாண கல்விச் செயலாளர், கிழக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர், பீடாதிபதி (கலை பீடம்) - கிழக்கு பல்கலைக்கழகம், தலைவர் (கல்வி;) - கிழக்கு பல்கலைக்கழகம், பதிவாளர் (பரீட்சை) - கிழக்கு பல்கலைக்கழகம், வலயக் கல்விப் பணிப்பாளர்கள்- கிழக்கு மாகாணம் உள்ளிட்டோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X