2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பெண்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு

Thipaan   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

எதிர்கால உலகில் பெண்கள் எனும் தலைப்பில் பெண்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு காத்தான்குடியில், இன்று(18)காலை  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையின் ஏற்பாட்டில் ஆரம்பமான இச் செயலமர்வின் ஆரம்ப வைபவத்தில், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக்கிளையின் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் மற்றும் உளவள ஆலோசகர் ரொபட் சில்வா இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக்கிளையின் தொண்டர் பிரிவு தலைவர் ஏ.சலீம் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த செயலமர்வில் 30 யுவதிகள் கலந்து கொண்டுள்ளதுடன் இன்று காலை ஆரம்பமான இச் செயலமர்வு நாளை மாலை நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X