2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாழ்வாதார மேம்பாட்டுக்கு கோழி வளர்ப்பு, வீட்டுத் தோட்டம்

Gavitha   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்

வாழ்வாதார மேம்பாட்டுக்காக கோழி வளர்ப்பும் வீட்டுத் தோட்டமும் என்ற தொனிப்பொருளில் கிழக்குப்பல்கலைக்கழக விலங்கு விவசாயத் திணைக்களமும் பயிர் விஞ்ஞான திணைக்களமும் இணைந்து விவசாயிகளுக்கான பயிற்சிப்பட்டறை செயலமர்வு ஒன்றை வெள்ளிக்கிழமை (17) நடத்தினர்.

இந்நிகழ்வின் போது, பயிற்சிப் பட்டறையின் ஒழுங்கமைப்பாளர் கலாநிதி.எம்.எம்.மஹ்சூன் வரவேற்புரையும் விவசாய பீடாதிபதி கலாநிதி பொ.சிவராஜா ஆரம்ப உரையையும் நிகழ்த்தினர்.

பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு, கோழி வளர்ப்பு மற்றும் வீட்டுத் தோட்டம் தொடர்பான விளக்கவுரை மற்றும் செய்முறை பற்றிய தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், அவர்கள் விவசாயத்தில் எதிர்நோக்கும் பிரச்சனை, அதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டு தீர்வுகளும் வழங்கப்பட்டன. 

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுடைய தற்போதைய வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா மற்றும் மட்டக்களப்பு அரச அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவி பேராசிரியை ஷானிகா ஹிரும்புரேகம ஆகியோர்களின் வழிகாட்டலின் கீழ், இந்தத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 24ஆம் திகதி 2014இல் கிழக்குப் பல்கலைக்கழக பிரதான மண்டபத்தில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப்பிரிவிலிருந்து 150 விவசாயிகள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கான விவசாய நடவடிக்கைகளுக்கான பிரச்சினைகள், நிலைமைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை (17) கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகம் செவ்வாய்க்கிழமை (14) கோரளைப்பற்று மத்தி (வாழைச்சேனை) பிரதேச செயலகம் ஆகியவற்றில் உள்ள முன்னணி விவசாயிகளிடமும் விவசாயம் சம்பந்தமான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

அதனையடுத்து, இவ்விரு பிரதேசங்களிலிருந்தும் முன்னணி விவசாயிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக கோழி வளர்ப்பும் வீட்டுத் தோட்டமும் என்ற தொனிப்பொருளில் கிழக்குப் பல்கலைக்கழக விலங்கு விவசாயத் திணைக்களமும் பயிர் விஞ்ஞான திணைக்களமும் இணைந்து, கிழக்கு பல்கலைக்கழகத்தின் அணுசரணையில் இப்பயிற்சிப் பட்டறையை ஒழுங்கு செய்து நடாத்தினர். 

இந்நிகழ்வில் திணைக்கள தலைவர்களும் பிரதேச செயலகத்திலிருந்து வருகை தந்த அலுவலர்களும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X