2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்துக்களை குறைப்பதுக்கான வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

Gavitha   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி. யுதாஜித்


யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் சர்வோதயம் முன்னெடுக்கும் சமூக விபத்துக்களை குறைப்பதுக்கான வேலைத்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் அரசாங்க அதிபரின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மாவட்ட உளவள வைத்திய நிபுணர் எஸ்.கடம்பநாதன், வைத்திய நிபுணர்  ஜீ.கௌரிபாலன், பெண்கள் சிறுவர் பொலிஸ் பொறுப்பதிகாரி, போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி, சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர்கள், இராணுவ அதிகாரி ,சர்வோதய கிழக்கு மாகான இணைப்பாளர் ஈ.எல்.ஏ.கரீம், யுனிசெப் உத்தியோகஸ்தர் திருமதி கே.ஜனார்தனி, சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு மாவட்ட உத்தியோகத்தர் எஸ்.குகதாசன் சர்வோதய மாவட்ட இணைப்பாளர் எஸ்.மதனகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாவட்டத்தில் அதிகரித்து வரும் சிறுவர் பிரச்சனைகள், வீதி விபத்துக்கள், தற்கொலை பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X