2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காத்தான்குடி பழைய கல்முனை வீதி புனரமைப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பழைய கல்முனை வீதியை (ஊர்வீதி) விஸ்தரித்து புனரமைக்கவுள்ள நிலையில், அவ்வீதியின் மத்தியிலிருந்து  5 மீற்றர்வரை அகலமாக்கப்படவுள்ளது.  இந்த நிலையில், 5 மீற்றர் பகுதிக்குள் உள்ள அனைத்துக் கட்டடங்களையும் உடைத்து 22.10.2014ஆம் திகதிக்குள் அகற்றுமாறு காத்தான்குடி நகரசபையின் தலைவர் எஸ்.எச்.அஸபரினால் கையொப்பமிடப்பட்ட  அறிவித்தல் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

துண்டுப்பிரசுரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'2014 ஜனவரி 3ஆம் திகதி  கடித மூலம் பழைய கல்முனை வீதி அபிவிருத்தி தொடர்பாக பொதுமக்களுக்கு காத்தான்குடி நகரசபை தெளிவான அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தது. அந்த அறித்தலில் வீதியின் மத்தியிலிருந்து சுமார் 5 மீற்றர்வரை அகற்றித்தருமாறு அறிவுறுத்தியிருந்தோம்.

காத்தான்குடி நகரசபையால் சிவப்பு நிறத்தைக் கொண்டு இறுதி அடையாளமாக இடப்பட்டுள்ள குறித்த இப்பகுதியை எதிர்வரும் 22.10.2014ஆம் திகதி அகற்றித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தவறும் பட்சத்தில் நகரசபை கட்டளைச் சட்;டம் 74.84ஆவது பிரிவின் கீழ், அனுமதியின்றி சட்டவிரோதமான கட்டடங்கள் அல்லது மதிலின் ஒருபகுதியை அகற்றுவதற்கான காத்தான்குடி நகரசபை முதல்வராகிய சாஹுல் ஹமீட் முகம்மது அஸ்பர் ஆகிய எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி குறித்த கட்டடத்தின் இறுதியாக இடப்பட்டுள்ள சிவப்பு நிற அடையாளத்தின் ஒருபகுதியை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றேன்'  எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X