2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஏமாற்று வேலை செய்வோருக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்: துரைரெட்ணம்

Gavitha   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

வேலை பெற்றுத்தருவதாக கூறி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிலர்,  வறிய இளைஞர்களிடம் பணத்தினைப்பெற்று ஏமாற்றுவது, அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு தரகு கோரி அழுத்தங்களை பிரயோகிப்பது போன்றவற்றை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உரிய தரப்பினர் முன்னெடுக்கவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலகமாக வேலை பெற்றுத்தருவதாக கூறி சில அரசியல்வாதிகளின் பெயரைப்பயன்படுத்தி, வறிய இளைஞர் யுவதிகளிடம் பெருமளவு பணம் பெறப்பட்டு ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அண்மையில் கிராணைச் சேர்ந்த ஒருவர் பலரிடம் பணத்தினைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். அவருக்கு பணம் வழங்கியவர்கள் அனைவரும் மிகவும் வறிய நிலையில் உள்ளவர்கள்.

புhதிக்கப்பட்டவர்கள் அவர்களது நிலைமை குறித்து பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்த போதும்  அதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

இச்சம்பவம் குறித்த விடயங்களை சிலர் எனது கவனத்துக்கு கொண்டு வந்தனர். அவர்களின் பணத்தை விரைந்து பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

அது மட்டுமன்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப்பணிகளுக்கு பலர் தரகு கேட்பதாக தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன.

மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் இவ்வாறான அபிவிருத்திகளில் தரகு வாங்கும் நடவடிக்கையை உரியவர்கள் கைவிடவேண்டும். இது எமது மக்களுக்கு வரும் அபிவிருத்திகள். அவற்றில் தரகு வாங்கி அதனை வலுவற்றதாக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X