2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மீனவர்களுக்கு தோணி, வலைகள் வழங்கி வைப்பு

Gavitha   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறை, கடுக்காமுனை, பண்டாரியாவெள, முனைக்காடு, முதலைக்குடா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 10 மீனவர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

குறித்த மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (19) பண்டாரியாவெளி மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனின் வேண்டுகோளுக்கிணங்க, லண்டனைச் சேர்ந்த நம்பிகை ஒளி எனும் அமைப்பு, குறித்த மீன்பிடி உபகரணங்களுக்கான நிதி உதவியினை, இலங்கையில் உள்ள உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் ஊடாக வழங்கி இருந்தது.

இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இதன்போது, மீனவர் ஒருவருக்கு தோணியொன்றும் வலையொன்றும என்ற அடிப்படையில் வழங்கப்பட்டன.

10 மீனவர்களுக்கும் 5 லட்சம் ரூபாய் செலவில் இம்மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக, உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின், பணிப்பாளர் எ.கங்காதரன் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X