2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கைபேசிக் கடையில் திருட்டு; சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடியில் கையடக்கத் தொலைபேசிக் கடையொன்று உடைக்கப்பட்டு கையடக்கத்தொலைபேசிகள்  திருடப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணொருவரை  நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது கடையிலிருந்து 250,000  ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் கடந்த 27ஆம் திகதி திருட்டுப்போனதாக ஏறாவூர்ப் பொலிஸில்  கடை உரிமையாளர் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து,  விசாரணை செய்துவந்த  நிலையில் இச்சந்தேக நபரை கைதுசெய்ததுடன், திருடப்பட்ட சில கையடக்கத் தொலைபேசிகளையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும்  சந்தேக நபரின் கணவனும் சகோதரனும் தலைமறைவாகியுள்ளனர். இவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X