2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

திவிநெகும நிகழ்வு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்


குடும்பப் பொருளாதாரம் மற்றும் போஷாக்கை  மேம்படுத்தும் நோக்கில், திவிநெகும (வாழ்வின் எழுச்சி) 6ஆம் கட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச நிகழ்வு கல்லடியில் உள்ள சமுர்த்தி பயனாளியின் வீட்டுத்தோட்டத்தில் இன்று திங்கட்கிழமை (20) இடம்பெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ.தவராஜா, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பூ.பிரசாந்தன், திட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.ஜயதீஸ், திவிநெகும தினைக்கள உத்தியோகத்தர்கள் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகள் தோட்டத்தில் மரங்களை நட்டதுடன்,  வீட்டுத்தோட்ட விதைகள், மரக்கன்றுகள், என்பனவற்றை சமுர்த்தி பயனாளிகளுக்கு  வழங்கி வைத்தனர். 

இறுதியில் அதிதிகள் வீட்டுத்தோட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட பழங்கள் மற்றும் மரக்கறிகளை பார்வையிட்டதோடு தோட்டத்ததையும் பார்வையிட்டு பயனாளியை உற்சாகப்படுத்தினர்.

திவிநெகுமவின் 6ஆம் கட்ட நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில்  காத்தான்குடி முதலாம் குறிச்சியில் நடைபெற்றபோது மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், மரக்கன்றுகள் மற்றும் பயிர் விதைகள்  வழங்கப்பட்டன.

 காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.கருணாகரன் உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி முகாமையாளர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முறக்கொட்டாஞ்சேனையில் திவிநெகும நிகழ்வு  நடைபெற்றபோது  பயிர்கள் மற்றும் பொருட்கள், கறவைப்பசுக்கள், கோழிக்குஞ்சுகள், ஆடுகள், கடற்றொழில் உபகரணங்கள் என்பன  வழங்கப்பட்டன.

மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத், மாவட்ட திட்டமிடல் பணிப்பளார் ஆர்.நெடுஞ்செழியன், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் விவசாயம், கடற்றெழில், கால்நடை, திவிநெகும திணைக்கள பணிப்பளார்கள், வேர்ள்ட்விஷன், முஸ்லிம் எயிட் போன்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X