2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மதுபாவனையும் சிறுவர் துஷ்பிரயோகம் கருத்தரங்கு

Gavitha   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்


சமாதானத்துக்கான இலங்கைச் சமயங்களுக்கான பேரவையின், மட்டக்களப்புக் கிளையின் ஏற்பாட்டில், ஞாயிற்றுக்கிழமை (19) மட்டக்களப்பு வவுணதீவு மங்கிகட்டு அ.த.க. பாடசாலையில் கருத்தரங்கொன்று நடைபெற்றது.

மதுபாவனையும் சிறுவர் துஷ்பிரயோகம் என்ற தலைப்பில், பாடசாலையின் அதிபர் எஸ்.ராஜகோபால் தலைமையில், நடைபெற்ற இக் கருத்தரங்கில், மது பாவனையால் ஏற்படும் பிரச்சினைகள், குடும்ப, சமுதாயச் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

விளக்கவுரைகளை, மண்டூர் சாயி சேவா நிலைய தலைவர் டாக்டர் என்.பிரேமதாச, மௌலவி முகமட் அஸ்வர் உள்ளிட்டோர் நிகழ்த்தினர்.

இக்கருத்தரங்கில், சமாதானத்துக்கான இலங்கைச் சமயங்களின் பேரவையின் பொருளாளார் சாந்தி முகைதீன், சிரேஷ்ட உறுப்பினர் சிவ ஸ்ரீ ஜெகதீஸ்வர குருக்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X