2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விவசாய வேலைத்திட்ட முன்னேற்றம் பற்றி ஆராய்வு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், கே.எல்.ரி.யுதாஜித்,எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட மாநாடு   மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்றது.

இதன்போது, விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்  ஆராயப்பட்டன.

இந்த மாநாட்டில் விவசாய அமைச்சின் செயலாளர் கலாநிதி மீகஸ் முல்ல, அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி நிமால் திஸாநாயக்க, விவசாய அமைச்சின் விரிவாக்கல் பிரிவு பணிப்பாளர் கலாநிதி கே.விஜயசேகர, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், மட்டக்களப்பு மாவட்ட விவசாய உதவி பணிப்பாளர் பி.உகநாதன், மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த விவசாய அமைச்சின் செயலாளர் கலாநிதி மீகஸ் முல்ல,

'விவசாய நடவடிக்கையில் ஏனைய மாவட்டங்களை விட,  மட்டக்களப்பு மாவட்டம் முன்னேற்றமானது. இந்த மாவட்டத்தில் அதிகமான விவசாயிகள் உள்ளனர். தேசிய விவசாய உற்பத்திக்கு பாரிய பங்;களிப்புச் செய்துவரும் மாவட்டமாகவும் இந்த மாவட்டம் திகழ்கின்றது.

மாவட்ட ரீதியாக விவசாய விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தி, அதன் மூலம் விவசாய வேலைத்திட்டத்தை மேலும் ஊக்கப்படுத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். அந்த வகையில், விவசாய அமைச்சரின் ஆலோசனையுடன் விவசாய அமைச்சும் விவசாய திணைக்களமும் இணைந்து மேற்கொண்டுவரும் மாவட்ட ரீதியான விவசாய விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் முதல் நடவடிக்கையாக மட்டக்களப்பில் இந்த மாநாடு நடத்தப்படுகின்றது' எனக் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X