2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஊறணியில் அம்பியுலன்ஸ் வண்டி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் கடும்காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்வம் புதன்கிழமை(23) இரவு இடம்பெற்றுள்ளது. 

இவ்விபத்தில், மட்டக்களப்பு சின்ன ஊறணியைச் சேர்ந்த எஸ்.டானியல் (வயது 44) என்ற நபரே பலியாகியுள்ளார்.

மாவெடிவெம்பு பிரதேச வைத்தியசாலையிலிருந்து நோயாளியை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டி, வாவிக்கரை வீதியால் செல்லும்போது மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியுள்ளது.

விபத்தில் காமடைந்த இருவரும்; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் அதிதீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் குறித்து மட்டக்களப்புப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X