2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 24 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை (24) காலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் களுவாஞ்சிகுடி, குமரன்கலா மன்ற வீதியைச் சேர்ந்த அரசரெத்தினம் (வயது 56) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

இவர், வீதியை கடக்க முற்பட்டபோது காரொன்று இவரை மோதியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் கூறினார்.

விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X