2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கமநல அமைப்புக்களின் விவசாய பிரதிநிதிகளுக்கான பயிற்சிப் பட்டறை

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 28 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
தேசிய உரச் செயலகத்தினால் மட்டக்களப்பு மாவட்ட கமநல அமைப்புக்களின் விவசாய பிரதிநிதிகளுக்கான பயிற்சிப் பட்டறை இன்று செவ்வாய்க்கிழமை (29) வந்தாறுமூலை கமநல சேவை நிலையத்தில் நடைபெற்றது.
 
இப்பயிற்சி பட்டரையில், சேதனப் பசளையின் முக்கியத்துவம், வினைத்திறன் மிக்க இரசாயனப் பசளையின் பாவனை, பசளைப் பிரயோகம் செய்ய வேண்டிய காலம் உள்ளிட்ட விவசாயம் சம்பந்தப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்டல்; இடம்பெற்றதாக விவசாய அமைச்சின் தேசிய உரச் செயலக மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிறாஜுன் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில், மாவட்ட விவசாயத் திணைக்கள விரிவாக்கல் பிரிவின் பாட விதான உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். சலீம், விசாயப் போதனாசிரியர்களான எஸ். சுதர்ஷன், எம்.ஐ.எம். ஜமால்தீன், வி. சுரேஷ;குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X