2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பார்வை புலன் குறைந்த மாணவர்களுக்கு இலசவ கண்ணாடி

Gavitha   / 2014 ஒக்டோபர் 28 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எஸ்.பாக்கியநாதன்

பெல்ஜியம் நாட்டிலுள்ள பரோபகாரி ஒருவரின் நிதியுதவின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பார்வைப் புலன் குறைவாகவுள்ள 41 மாணவர்களுக்கு, கண்ணாடிகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டதாக, இலங்கை சிறுமியர் சாரணியர் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரியந்தி ராஜபக்ஷ தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கண் பரிசோதனைப் பரிவு கேட்போர் கூடத்தில்; திங்கட்கிழமை (27) இடம்பெற்ற இந்நிகழ்வில், இலங்கைச் சிறுமியர் சாரணியர் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நிர்மலி விஜேகோன், திட்ட அதிகாரி சத்துரிகா ஹெட்டியாராச்சி, பெல்ஜியம்- இலங்கை மகளிர் அமைப்பைச் சேர்ந்த பரோபகாரி சாமினி ஜேகோப், இலங்கைச் சிறுமியர் சாரணியர் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் டிலந்தி மோகன்ராஜ் உள்ளிட்டோரும் மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். 

எனது பணியின் முதற் கட்டமாகவே இன்றைய தினம் 41 மாணவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டதாகவும் எதிர் காலத்தில் தொடர்ந்தும் மாணவர்களின் கண்கள் பரிசோதிக்கப்பட்டு, பார்வைப் புலன் குறைந்த மாணவர்களுக்கு கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்படும் என்றும்  பெல்ஜியம்- இலங்கை மகளிர் அமைப்பைச் சேர்ந்த பரோபகாரி சாமினி ஜேகோப் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X