2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

உளநல தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளின் முடிவுகள்

Gavitha   / 2014 ஒக்டோபர் 28 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படும் உளநல தினத்தன்று மட்டக்களப்பில் இயங்கி வரும் சர்வதேச உளவியல் கற்கை நிலையத்தால், ஒக்டோபர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட அகில இலங்கை ரீதியிலான போட்டியின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக, சர்வதேச உளவியல் கற்கை நிலையத்தின் பணிப்பாளர் ரீ.பிரான்சிஸ் செவ்வாய்கிழமை (28) அறிவித்துள்ளார்.

'மன நோயாளர்களும் மனிதர்களே' எனும் ஒரு தலைப்பில் கட்டுரை மற்றும் கவிதைகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.

கட்டுரைப் போட்டியில், து.கௌரீஸ்வரன் முதலாமிடத்தையும் எஸ்.எம்.நஸார் இரண்டாமிடத்தையும் க.மயூரிக்கா மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை கவிதைப் பேட்டியில், அருள்மணி சுப்பிரமணியம் முதலாமிடத்தையும் அ.கௌரிதாசன் இரண்டாமிடத்தையும் க.குலசேகரம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்குவதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X