2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர்களுக்கான கூட்டம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 29 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஏற்பாட்டில், சிறுவர் சேவையை மேம்படுத்தும் பொருட்டு சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர்களுக்கான கூட்டம் வவுணதீவு பிரதேச செயலகத்தில் நேற்று புதன்கிழமை (28) நடைபெற்றது.

வவுணதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபுவின்  ஆலோசனைக்கமைய  பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் த.நிர்மலராஜின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மண்முனை மேற்கு, மண்முனைப்பற்று, மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஏறாவூர்ப்பற்று, ஏறாவூர் நகர் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களும் சிறுவர் நன்னடத்தைப்பிரிவின் மட்டக்களப்பு நகர் பிரிவு உத்தியோகஸ்தர்களும்  கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் இன்றையகாலத்தில்  குடும்பங்கள்; மற்றும் சமூகத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்,  சிறுவர்களின் பிரச்சினைகளை கையாள்வதில் உத்தியோகஸ்தர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X