2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாணவர் ஊர்வலமும் விழிப்பூட்டலும்

Gavitha   / 2014 ஒக்டோபர் 29 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தேசிய எழுத்தறிவு தினத்தையொட்டி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப்பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட மாணவர் ஊர்வலமும் விழிப்பூட்டல் நிகழ்வும் இன்று (29) புதன்கிழமை நடைபெற்றன.

உதவிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம். ஷரீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில், வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எம் அஹமட் லெப்பை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அல்-ஜுப்ரிய்யா வித்தியாலய மாணவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வுகளில், பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.இஸ்மாலெப்பை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தேசிய எழுத்தறிவு தினம் தொடர்பில், போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X