2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல் 

பதுளை கொஸ்லந்தை, மீரியாபெத்த பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவி, ஒத்தாசைகளை மனிதாபிமான அடிப்படையில் வழங்குவதற்காக,  கிழக்கு மாகாணத்திலுள்ள தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் பொதுநல அமைப்புக்கள், பொதுமக்கள் உடனடியாக முன்வரவேண்டும் என கிழக்கு மாகாண  முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நேற்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மண்சரிவால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் எனது அனுதாபத்தையும் ஆழ்ந்த கவலையையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மீரியாபெத்த பகுதியில் திடீரென ஏற்பட்ட மண்சரிவு அப்பகுதி மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. பல நூற்றாண்டுகாலமாக எமது தாயகத்துக்கு அர்ப்பணிப்புச் செய்து வாழ்கின்ற அந்த மக்கள், தற்போதைய அரசாட்சிக்காலத்தில் முன்னேற்றத்தை கண்டுவரும் நிலையில் ஏற்பட்டுள்ள இயற்கையின் சீற்றம் பரிதாபகரமான நிலைக்கு தள்ளியுள்ளது.

அரசாங்கத்தின் முயற்சியால் முன்னெடுக்கப்படும் துரித மீட்புப்பணிகளும்  நிவாரண நடவடிக்கைகளும் வெற்றியளிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். அத்துடன், இந்த மக்கள் சீக்கிரமாக மீண்டெழுந்து சுமூகமாகவும் நிம்மதியாகவும்  வாழவேண்டும் என்றும்  இறைவனை வேண்டுகிறேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X