2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

புத்தகக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


'வாசிப்பை நேசிக்க வைக்கும்' எனும் கருப்பொருளில் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் மட்டக்களப்பு நகரமண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றுவருகின்றது.

தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி மாநகரசபையின் ஆணையாளர் எம்;.உதயகுமார் தலைமையில் இக்கண்காட்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
பிரதம அதிதியாக மாவட்ட அரச அதிபர் திருமதி பி;.எஸ்.எம்.சாள்ஸ், கௌரவ அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானபீடாதிபதி வைத்திய கலாநிதி ரி.சுந்தரேசன் ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்துவைத்தனர்.

இதில் சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, உதவிக்கல்விப் பணிப்பாளர்  த.யுவராஜன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்

இதன்போது,  மீரியாபெத்தை மண்சரிவில் உயிர்நீத்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X