2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 02 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

உற்பத்திறன் மேம்பாட்டு அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், காத்தான்குடி பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி பிரிவினால் பெற்றோருக்கான விழிப்புணர்வூட்டல்; கருத்தரங்கு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று சனிக்கிழமை  (01) நடைபெற்றது.

இதன்போது, இன்றைய அவசர உலகில் வாழ்கின்ற நாம், பிள்ளைகளை கல்விச் சூழலில் எவ்வாறு ஊக்குவிப்பது என்பது தொடர்பில் உளவியல் சார் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. 

பெற்றோர் பிள்ளைகளின் கல்வியில் முழுக்கவனம் செலுத்துவதுடன், அவர்களின்  முன்னேற்றத்தில் அக்கறையாகவும் இருக்கவேண்டும் என்று  இங்கு உரையாற்றிய காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் தெரிவித்தார்.

இந்தக் கருத்தரங்கில் காத்தான்குடி பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.ரி.எம்.அஸ்மி தாஜுதீன்,    காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், சம்மாந்துறை பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகஸ்தர்  ஐ.எல்.எம்.இயாஸ் உள்ளிட்டோர்   கலந்துகொண்டு தங்களது பங்களிப்பை  வழங்கினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X