2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வாழ்வின் எழுச்சி சிறுவர் கெக்குழு காலாசாரப் போட்டி நிகழ்வு

Gavitha   / 2014 நவம்பர் 02 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மாவட்ட மட்டத்திலான வாழ்வின் எழுச்சி சிறுவர் கெக்குழு காலாசாரப் போட்டி நிகழ்வு சனிக்கிழமை (01) மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து, தெரிவு செய்யப்பட்ட சிறுவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வாழ்வின் எழுச்சி திணைக்கள பணிப்பாளர் பி. குணரெட்ணம், வாழ்வின் எழுச்சி திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எப்;. மனோகிதராஜ் ஆகியோர் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

போட்டியில் வெற்றிபெறும் சிறுவர்கள், தேசிய மட்டத்தில் நடைபெறும் போட்டியில் பங்குபெறவுள்ளதாக, வாழ்வின் எழுச்சி திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மனோகிதராஜ் தெரிவித்தார்.

போட்டி நிகழ்வில் நடனம், குழுநடனம், பாடல், சித்திரம் வரைதல், சிறுகதை, கட்டுரை, அறிவிப்பு உட்பட வேறுபல போட்டிகளும் இடம்பெற்றன.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X