2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பிரம்புக் கைத்தொழில் பயிற்சி

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 03 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு சிறைச்சாலையில்  தீர்ப்பு வழங்கப்பட்ட சிறைக்கைதிகளுக்கு  இன்று திங்கட்கிழமை (03) பிரம்புக் கைத்தொழில் பயிற்சி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியக் கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள தேசிய அருங்கலைகள் பேரவையின் அனுசரணையுடன்  சிறைச்சாலைகள் புனரமைப்பு திணைக்களத்தால், இந்தப்  தொழில் பயிற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சிக்காக  131 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து தெரிவாகியுள்ளதுடன்,  முதற்கட்டமாக 15 கைதிகளுக்கு இந்தப் பயிற்சி  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது,  ஏற்கெனவே தொழிற்பயற்சியை முடித்த 02  கைதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சிறைச்சாலைகள் புனரமைப்பு ஆணையாளர் டி.ஜெயசிங்க,  மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எச்.வி.ஐ.பிரியங்க, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ஆர்.மோகனராஜ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம், சிறைச்சாலைகள் நலன்புரி அமைப்பின் தலைவர் டாக்டர் கே.கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கருத்துத் தெரிவித்த சிறைச்சாலைகள் புனரமைப்பு ஆணையாளர் டி.ஜெயசிங்க, 'கைதிகள் சிறைச்சாலையிலிருந்து வெளியேறும்போது வாழ்வாதரத்துடன் வெளியேற வேண்டும் என்பதற்காக  தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 'மஹிந்த சிந்தனை' வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தை  சிறந்த முறையில் பயன்படுத்தி தொழிற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்' எனக் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X