2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உருளைக்கிழங்கு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 03 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு மாவட்டத்தின்; போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வரட்சியால் பாதிக்கப்பட்ட சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களுக்கு திங்கட்கிழமை (03) திவிநெகும (வாழ்வின் எழுச்சி) அபிவிருத்தித் திணைக்களத்தால் ஒருதொகுதி உருளைக்கிழங்குகள் வெல்லாவெளியில் அமைந்துள்ள திவிநெகுமவாழ்வின் எழுச்சி காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டன.

இதன்போது, போரதீவுப்பற்று பிரதேசத்தின் 43 கிராம சேவையாளர் பிரிவிலுமுள்ள தெரிவுசெய்யப்பட்ட 7,595 குடும்பங்களுக்கு தலா  குடும்பத்திற்கு 2 கிலோகிராம் படி; 15,190 கிலோகிராம் உருளைக்கிழங்குகள்  வழங்கப்பட்டதாக போரதீவுப்பற்று பிரதேசத்தின் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் க.உதயகுமார் கூறினார்.

இந்நிகழ்வில் போரதீவுப் பற்று பிரதேச வாழ்வின் எழுச்சித்திட்ட முகாமையாளர் திருமதி.புவனேஸ்வரி ஜீவகுமார், மற்றும் திவநெகும உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X