2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விழிப்புணர்வுக் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 04 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 

கிழக்கு மாகாண சமூகசேவைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில்,  போரதீவுப்பற்று பிரதேச முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு  சமூக சேவைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு  வெல்லாவெளியிலுள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (04) நடத்தப்பட்டது.

இதன்போது சமூகசேவைத் திணைக்களத்திலிருந்து முதியோர்; பெற்றுக்கொள்ளக்கூடியதான பொதுசன மாதாந்த உதவி பெறுவதற்கு தேவையான தகுதி, நோய் உதவிக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் முறை, வலுவிழந்தோருக்கு வழங்கப்படும் உபகரண வசதிகள், சுயதொழில் உதவிக் கொடுப்பனவுகள், சிறு நிவாரணக் கொடுப்பனவுகள், இவ்வாறான உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு பிரதேச சமூகசேவை உத்தியோகஸ்தரிடம் சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள், மாகாண மற்றும் மதிய அரசின் செயற்பாடுகள் போன்ற பல விடயங்கள் தொடர்பில்  விளக்கமளிக்கப்பட்டதாக போரதீவுப்பற்று பிரதேசத்தின் சமூகசேவை உத்தியோகஸ்தர் இ.சிவலிங்கம் கூறினார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினத்தின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில்; சமூகசேவை உத்தியோகஸ்தர் இ.சிவலிங்கம், முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தயோகஸ்தர் எஸ்.மதிசுதன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் கே.கருணாகரன், மற்றும் போரதீவுப்பற்றுப் பிரதேசத்திலுள்ள முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X