2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கிழக்கு பல்கலையில், பகுதிநேர முதுமானி கற்கைக்கு அனுமதி

Gavitha   / 2014 நவம்பர் 05 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமானி கற்கை நெறியை பகுதி நேரமாக கற்பதற்கு, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது என, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச்செயலாளர் பி. உதயரூபன் புதன்கிழமை (05) தெரிவித்தார்.

கிழக்குப்பல்கலைக் கழகத்தில் கல்வி முதுமானி கற்கை நெறியியை தொடர்வதற்கான கடமை விடுமுறையை பெறுவதற்கு, நிருவாகச் சிக்கல்களை எதிர்நோக்கிய ஆசிரியர்கள் இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச்செயலாளர் பி. உதயரூபன் கல்வி முதுமானி கற்கை நெறியினை தொடர்வதன் அவசியம் சம்மந்தமாக, கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர், பதிவாளர், பீடாதிபதிகள் மற்றும் துறைசார் தலைவர்களின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

மேலும் ஆசிரியர் பிரமாணக் குறிப்பில் 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழக கற்கைச் சட்டத்தின் 46 (6) ஐ,(ஐஐஐ) பிரிவுக்கிணங்க நடவடிக்கையெடுக்குமாறும் கேட்டிருந்தார்.

இதன் காரணமாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் இந்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் கிழக்குப்பல்கலைக் கழக நிருவாகம் மேற்படி கற்கை நெறியியை வார இறுதி நாட்களில் தொடர்வதற்கு தீர்மானமெடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பி. உதயரூபனுக்கு கல்வி முதுமானி கற்கை நெறியியை கிழக்கு மாகாண ஆசிரியர்கள் பகுதி நேரமாகக் கற்பதற்கு அனுமதி வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X