2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வெல்லாவெளிப்பகுதியில் குண்டு மீட்பு

Gavitha   / 2014 நவம்பர் 05 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரவுக்குட்டபட்ட 35ஆம் கிராமத்தில் இருந்து குண்டு ஒன்று இன்று புதன்கிழமை (05) மீட்கப்பட்டுள்ளதாக, வெல்லாவெளி பொலிஸார் தெரவித்தனர்.

35ஆம் கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவர் தனது மேட்டு நிலத்தை பண்படுத்திக்கொண்டிந்த போதே, இக்குண்டு மண்ணில் புதையுண்டிருந்த நிலையில் வெளியே வந்துள்ளது.

இச்சம்பவம் பற்றிய தகவல் கிடைக்கப்பெற்றதும் சம்பவ இடத்துக்கு விரைந்த வெல்லாவெளி பொலிஸார் மட்டக்களப்பு குண்டு செயலிழக்கும் பிரிவை உடன் உரிய இடத்திற்கு அழைத்து குண்டை செயலழக்கச் செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தார்.

கடந்த யுத்த காலப் பகுதியில் இக்குறித்த இடத்துக்கு அருகில் விஷேட அதிரடிப்படை முகாம் ஒன்று இருந்துள்ளமை குறிப்பிடத்தக்தாகும்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X