2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வீதிகளை செப்பணிடும் பணிகள் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 06 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதியிலுள்ள 380 கிராமங்களில்; கவனிப்பாரற்றுக் கிடந்த வீதிகளைச் செப்பணிடும் பணிகள் இன்று வியாழக்கிழமை (06)  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செங்கலடி, கொம்மாதுறை மற்றும் வந்தாறுமூலை ஆகிய கிராமங்களில் பழுதடைந்துள்ள வீதிகளே செப்பணிடப்படவுள்ளன.

'மகநெகும' எனப்படும் வீதி அபிவிருத்தி உபகரணங்கள் கம்பனியின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவின்  பணிப்புரைக்கமைய, கல்குடாத்தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் டி.எம்.சந்திரபாலவின் வேண்டுகோளுக்கிணங்க, மகநெகும கம்பனியிலிருந்து வீதி அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் 13 பாரிய இயந்திராதிகள் கல்குடாத்தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது செப்பணிடப்படும் வீதிகளில் சில 40, 50 வருடங்களாகவே கவனிப்பாரற்றுக் கிடந்ததாக கல்குடாத்தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கல்குடாத்தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மத்திய கிளைச் செயலாளர் ஐ.லலீந்திரன், கொம்மாதுறை கிளைத்தலைவர் கே.கோவிந்தன், செங்கலடி கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் வி.கணேசநாதன், செங்கலடி விளையாட்டுக்கழகத் தலைவர் சி.எஸ்.வடிவேல், மகளிர் அமைப்புச் செயற்பாட்டாளர் யோகேந்திரன் ரமணி உட்பட கிராம மக்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X