2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விபத்தில் நால்வர் காயம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 07 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பமொன்றுடன் மோதியதால், காயமடைந்த 4 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடியிலிருந்து மட்டக்களப்பு தொழில் திணைக்களத்துக்கு இந்த முச்சக்கரவண்டி  பயணித்துக்கொண்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

மாஞ்சோலை வைத்தியசாலையில் சுத்திகரிப்பாளர்களாக பணியாற்றுகின்ற நிகாரா (வயது 35),  றிபாயா (வயது 38) மற்றும்  சாரதி நாகிவ் (வயது 41)  உள்ளிட்ட நால்வர்  காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X