2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

திறன் அபிவிருத்திக் கருத்தரங்கு

Kogilavani   / 2014 நவம்பர் 09 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, சிறிய நடுத்தர தொழில் முயற்சி வாடிக்கையாளர்களுக்கான திறன் அபிவிருத்திக் கருத்தரங்கு சின்ன உப்பொடை ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (9) நடைபெற்றது.

இலங்கை வங்கியின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில் 200 வாடிக்ககையாளர்கள் கலந்துகொண்டனர்.

ஆதாயமிக்கதாக சந்தைப்படுத்தலை ஏற்படுத்துவதற்கான தலைமைத்துவத்தை அடைவதற்கான ஆலோசனைகளை கிழக்கு பல்கலைக்கழகத்தின் வருகைதரு உளவளத்துணையாளர் ஜே.டபிள்யு.எம்.போரம் வழங்கினார்.

வியாபாரத்தில் வெற்றியடைவதற்கான முக்கிய பிரதான கருப்பொருட்களைப்பற்றி இலங்கை வங்கியின் கிழக்குப் பிராந்திய உதவிப்பொது முகாமையாளர் கே.பி.ஆனந்தநடேசன் விளக்கமளித்தார்.

இலங்கை வங்கியின் விற்பனை மற்றும் நெறிப்படுத்தல் முகாமைத்துவ பிரதிப் பொது முகாமையாளர் ஜி.எல்.பி; ஜினோசோமா, வாடிக்ககையாளர் உற்பத்தி முகாமைத்துவ உதவிப் பொது முகாமையாளர் எச்.எஸ்.ஜெயவர்த்தன, மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் வி.சிந்தியா மார்ட்டின் வங்கி முகாமையாளர்கள் கலந்துகொண்டனர்.

மிகவும் உயர்மட்டத்ததை அடைந்த வாடிக்கையாளர்கள் இருவர் தங்களது முன்னேற்றம் பற்றி விளக்கமளித்ததோடு அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதன்போது வாடிக்கையாளர்களின் முன்னேற்ற ஆலோசனைகள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைப் பற்றி கூறியதோடு அதற்கான தீர்வுகளும் வங்கி அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X