2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் மட்டு. கிளைக்கு புதிய அலுவலகம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 11 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தினுடைய மட்டக்களப்புக் கிளைக்கான புதிய அலுவலகம் புதிய கல்முனை வீதி கல்லடியில் நேற்று திங்கட்கிழமை (10) திறந்துவைக்கப்பட்டது

வாகனங்கள் செலுத்துவதற்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க விண்ணப்பிப்போர் உடல் நிலையின் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்தும் வைத்தியச் சான்றிதழ்களை இந்த அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அலுவலக பொறுப்பதிகாரி த.ஹரிதேவா தெரிவித்தார்.

இந்த நிலையம் திறக்கப்பட்ட நேற்றையதினம் (10) 100 இற்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு வைத்தியச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதுவரை காலமும் ஒலிவ் லேன், மட்டக்களப்பு எனும் முகவரியில் இந்த  அலுவலகம் இயங்கிவந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X