2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

குப்பைககளால் வயல்வெளிகளும் ஆற்றங்கரையும் பாதிப்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 11 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்   

போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பழுகாமம் கிராம மக்கள், தும்பங்கேணி - பழுகாமம் பிரதான வீதியோரத்தில் குப்பைகளை கொட்டுவதால், இவ்வீதியோரத்தை  அண்டியுள்ள வயல்வெளிகளும் ஆற்றங்கரைப்பகுதியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுவருவதாக அக்கிராம விவசாயிகளும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளினால் துர்நாற்றம் வீசுவதாகவும் இவர்கள் கூறினர். 

போரதீவுப்பற்று பிரதேச சபை தமது கிராமத்தினுள்; வந்து குப்பைகள் சேகரிக்கும் பணியை கடந்த 3 மாதகாலமாக நிறுத்தியுள்ளது. இதனால்,  தங்களது வீட்டுக்கழிவுகளை வைத்திருக்கமுடியாமல் வீதியோரத்தில் கொட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பழுகாமம் கிராமவாசிகள்  தெரிவிக்கின்றனர்.

போரதீவுப்பற்று பிரதேச சபையால் பழுகாமம் கிராமத்தில் குப்பைகள் சேகரிக்கும் பணி நிறுத்தப்பட்டமை தொடர்பில் பிரதேச சபைச் செயலாளர் எஸ்.குபேரனிடம் இன்று செவ்வாய்க்கிழமை (11) கேட்டபோது,

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் மழை போதியளவாக பெய்யவில்லை என்பதுடன்,   தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது.
இந்நிலையில் தமது பிரதேச சபையிலுள்ள சுத்திகரிப்பு ஊழியர்களை, மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதற்கு  ஈடுபடுத்தியுள்ளோம். அத்துடன், ஆளணிப் பற்றாக்குறையும் உள்ளது.

இதனாலேயே, பழுகாமம் கிராமத்தில் குப்பைகள் சேகரிக்கும் பணியை தாம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் கூறினார். 

மழை பெய்து கிணறுகளில் நீர் ஊறத் தொடங்கியதும் தம்மால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். இதன் பின்னர்,  வழமைபோன்று கழிவுகளை சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X