2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

படுவான்கரையில் மழை பெய்யாமையால் பெரும்போகம் பாதிப்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 11 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு, படுவான்கரைப் பகுதியில் மழைநீரை நம்பி மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மையானது  போதியளவான மழை பெய்யாமையால், வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நெல் விதைத்து 2 மாதங்களாகின்றன. மழை இன்மையால் உயரமான பகுதிகளிலுள்ள நெற்பயிர்கள் உஷ்ணத்தால் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.  இதை விட நிலக்கடலை, கௌப்பி, சோளன், பயறு போன்ற மேட்டுநிலப் பயிர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  விவசாயிகள் கூறுகின்றனர். 

இந்நிலையில், படுவான்கரைப் பகுதியான பழுகாமம் கமநல கேந்திர நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 2,000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்வெளியில் பெரும்போக வேளாண்மை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மேலும், மாரி மழை போதியளவாக  பெய்யாமையால் இப்பகுதி விவசாயம் பாதிக்கப்படுவதாக கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தெ.வேளவேந்தன் தெரிவித்தார்.   

பழுகாமம் கமநல கேந்திர நிலையத்திலிருந்து இதுவரையில்  ஒரு உரமூடை 350 ரூபாய் படி 4,500 இற்கும் மேற்பட்ட உரமூடைகள் விவசாயிகளுக்கு  விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X