2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சிறுவர் உரிமை கண்காணிப்புக் குழுக்களுக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 11 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் சிறுவர் உரிமை கண்காணிப்புக் குழுக்களின் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக்கும் பொருட்டு, சிறுவர் உரிமை கண்காணிப்புக் குழுக்களுக்கான செயலமர்வு புதிய காத்தான்குடி தெற்கு பலநோக்கு மண்டபத்தில்  இன்று செவ்வாய்க்கிழமை (11)  நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் கே.சக்திநாயகம் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் சிறுவர் உரிமை கண்காணிப்புக் குழுக்களுக்களின் உறுப்பினர்கள், கிராம உத்தியோகஸ்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

கிராம ரீதியாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் உரிமை கண்காணிப்புக் குழுக்களின் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக்குவதுடன், சிறுவர்களின் பிரச்சினைகளை இக்குழு அடையாளப்படுத்தி அவர்களின்; தேவைகளை கண்டறிவது தொடர்பில் விழிப்புணர்வூட்டும்; நடவடிக்கையாக இச்செயலமர்வு நடத்தப்படுவதாக காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் கே.சக்திநாயகம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X