2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மங்களாராமய விஹாராதிபதி முறைப்பாடு

Kanagaraj   / 2014 நவம்பர் 11 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக மட்டக்களப்பு மங்களாராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன், தனக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பும் விலக்கிகொள்ளப்பட்டுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு வகையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதற்கான பொறுப்பை பொலிஸ் திணைக்களமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் விஹாராதிபதி செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இருக்கின்ற ஒரேயொரு பௌத்த விஹாரை மங்களராம விஹாரையாகும்.

இந்த விஹாரையில் மின்சாரத்தை துண்டிப்பதற்காக வருகைதந்த இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தொடர்பிலான காணொளி இணையத்தளங்களில் வெளியானது.

அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X