2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'தவறிலிருந்து விடுபட்டு வாழ்வதே மானிடப் பண்பு'

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 14 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


பொதுவாக தவறு விடுவது மனித இயல்பு. ஆனால், அத்தவறிலிருந்து விடுபட்டு வாழ்வதே மானிடனின் சிறந்த பண்பாடென சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களத்தின் காத்தான்குடி பிரதேச செயலப்பிரிவு அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.எம்.றசூல்ஸா தெரிவித்தார்.

சிறிய குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டு சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட காத்தான்குடி மற்றும் காத்தான்குடியை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான ஆன்மிகச் செயலமர்வு நேற்று வியாழக்கிழமை காத்தான்குடி மஸ்ஜிதுல் உமர் சரீப் மண்டபத்தில் நடைபெற்றது.  இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'தவறு  இயல்பாக ஏற்பட்டுவிடுகின்றது. ஆனால், செய்த தவறை விட்டு விலகி அதிலிருந்து திருந்தி வாழ்வது சிறந்த மானிடப் பண்பு. சிறந்த மனிதனாக வாழ்வதற்குரிய சந்தர்ப்பமாக இதை நாங்கள் பார்க்க வேண்டும். தவறுகளிலிருந்து திருந்தி வீட்டிலும் குடும்பத்திலும் சமூக சூழலிலும் எதிர்காலத்தில் செல்வாக்குள்ள மனிதர்களாக வாழ வேண்டும்.

சிறிய குற்றங்களுக்காக  நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்டு சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு ஆன்மிகச் செயலமர்வுகளை நாங்கள் நடத்தி, அவர்களின் மனோநிலையில் ஆன்மிகச் சிந்தனை ஏற்படவும் அதன் மூலம் சிறந்த மனிதனாக வாழ்வதற்கான வழிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கையாக இதை நாங்கள் நடத்துகின்றோம்' என தெரிவித்தார்.

இச்செயலமர்வில் சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களத்தின் மட்டக்களப்பு சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகஸ்தர் எஸ்.தயானந்தன் உட்பட உலமாக்களும் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X