2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பிரதேசமட்ட இலக்கிய விழா

Sudharshini   / 2014 நவம்பர் 15 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசமட்ட இலக்கிய விழா வெள்ளிக்கிழமை (14)  போரதீவுப்பற்று பிரதே செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கல்வி அதிகாரிகள,; பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின்போது, 2013 மற்றும் 2014 ஆகிய இரு ஆண்டுகளிலும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவினால் நடத்தப்பட்ட கவிதை எழுதுதல், கவிதை பாடல், கையெழுத்துப்போட்டி, கட்டுரை, பாடல்ஆக்கம், நாட்டார் கலை ஆற்றல், விவரணம், சிறுகதை, சிறுவர் கதை எழுதுதல் போன்ற பல போட்டிகளில் முதலாம், இரண்டாம் மூன்றாம்  இடங்களைப் பெற்ற பாடசாலை மாணவர்கள் உட்பட 45 பேருக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X