2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டக்களப்புக்கு வெளிநாட்டு செஞ்சிலுவைச்சங்கக்குழு விஜயம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 16 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல், எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தத்தின்போது சேதமடைந்த நிலையில்,  மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு செஞ்சிலுவைச்சங்கக்குழு  சனிக்கிழமை (15) மாலை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்தது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைக் காரியாலயத்தில் நடைபெற்ற சந்திப்பில், மாவட்டத்தின் தற்போதைய நிலைமை  பற்றி இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை அதிகாரிகளிடம் இக்குழுவினர் கேட்டறிந்தனர்.  இதன் பின்னர், காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு இக்குழுவினர் சென்று வைத்தியாசலையின் தற்போதைய நிலை பற்றி வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்துகொண்டதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை நிவைவேற்று அதிகாரி வே.பிறேமகுமார் தெரிவித்தார்.

காத்தான்குடி தள வைத்தியசாலை நோர்வே செஞ்சிலுவைச் சங்கத்தால் 600 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.

நோர்வே, ஒஸ்றியா, கொங்கொங், ஐஸ்றின்  ஆகிய நாடுகளைச் சேர்ந்த செஞ்சிலுவைச் சங்கங்களிலிருந்து 6 பேர் கொண்ட குழு மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ளது.

ஒருவாரகாலம் இவர்கள் தங்கியிருந்து  செஞ்சிலுவை அமைப்புக்களால் கடந்த காலத்தில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்;பட்ட அபிவிருத்திகளின் முன்னேற்றம் பற்றி ஆராயவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், சுனாமியால் பாதிப்பை எதிர்நோக்கிய  மக்களுக்காக வெளிநாட்டு செஞ்சிலுவைச் சங்கங்கள் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் களூவஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை, பெரியகல்வாறு வைத்தியசாலை, ஒந்தாச்சிமடம் 116 வீட்டுத்திட்டம், வாகரை வீட்டுத்திட்டம், நாசிவன்தீவு வீட்டுத்திட்டம் போன்ற பல  அபிவிருத்திகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X