2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மகிழடித்தீவில் புதிய நீர்த்தாங்கி

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 18 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்துக்கு உட்பட்ட  மகிழடித்தீவுக் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி பாவனைக்காக நேற்று திங்கட்கிழமை (17) கையளிக்கப்பட்டது.

பட்டிப்பளை பிராந்திய வேள்ட்விஷன் அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் கிராமிய குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ், மேற்படி கிராம அமைப்புக்களுடன் இணைந்து இந்த நீர்த்தாங்கி அமைக்கப்பட்டது.

குடிநீர் வழங்கலுக்கான  இந்த நீர்த்தாங்கி 1,696,747 ரூபாய் செலவில் அமைக்கப்பட்டதுடன், இதன் மூலம் மேற்படி கிராமத்திலுள்ள 23 குடும்பங்களைச் சேர்ந்த  81 பேர் நன்மையடையவுள்ளனர்.

மகிழடித்தீவு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் வல்லிபுரம் அன்னகேசரி தலைமையில்  நடைபெற்ற இந்த நிகழ்வில்  மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினம், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.விநோதன், வேள்ட்விஷன் நிறுவன கள நடவடிக்கைக்கான வலய முகாமையாளர் எ.அலெக்ஸ் வென்சமின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X