2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வேலையை நிரந்தரமாக்கக் கோரி காவலாளி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 19 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் தற்காலிகமாக கடமையாற்றிவந்த காவலாளி ஒருவர், தனது வேலையை நிரந்தரமாக்குமாறு  கோரி பாடசாலை மாடியில் ஏறி நேற்று செவ்வாய்க்கிழமை (18) மாலை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இது பற்றித் தெரியவருவதாவது,

'சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில்  கடந்த 03  வருடங்களாக  22 வயதான இந்தக் காவலாளி தற்காலிகமாக கடமையாற்றி வருகின்றார்.

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு நிரந்தரக் காவலாளிகள் மற்றும் சிற்றூழியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், தனது  வேலையை  நிரந்தரமாக்குவதற்கான முயற்சிகளை இவர்  மேற்கொண்டார். இருப்பினும்,  அது கைகூடவில்லை என்பதால்,  தனது தற்காலிக வேலையை நிரந்தரமாக்கித் தருமாறு கோரியே இவர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டார்

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, பொலிஸார்  சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.  இவரது வேலை விடயம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், இது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்துவதாகவும் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுசித்த விதானகே கூறியதைத் தொடர்ந்து இவர்  தனது ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு மாடியிலிருந்து கீழே இறங்கியதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X