2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 21 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பில் தொடர்ந்து மழை பெய்துவருவதால், தாழ்நிலப் பிரதேசங்கள் இன்று வெள்ளிக்கிழமை (21) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு நகரில் தனியார் பஸ் நிலையம், பயனியர் வீதி, லேடி மெனிங் வீதி, சின்ன உப்போடை வீதிகளும் மற்றும்  ஊறணி, இருதயபுரம் போன்ற தாழ்நிலப் பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தொடர்ந்து இன்று முழுநாளும் மழை பெய்தால் தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள மக்கள் இடம்பெயரவேண்டி வரலாம் எனவும் அவர்களுக்கான நிவாரண உதவிகளைச் செய்வதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று வெள்ளிக்கிழமை (21) காலை 8.30 மணி வரையான கடந்த 24 மணிநேரத்தில் மட்டக்களப்பில் 79.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்  நவகிரிஆறில் 35 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் தும்பங்கேணியில்  81.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்  வாகனேரியில்  92.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் வாகரை கட்ட முறிவுக்குளத்தில்  64.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்  உன்னிச்சையில் 74 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்  றூகமத்தில்  110.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையப் பொறுப்பாளர் கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X