2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சிநேகபூர்வ உறவை ஏற்படுத்தும் நோக்கில் சகாச விளையாட்டுக்கள்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 25 , பி.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

முப்பது வருடகால யுத்தத்தின் பின்னர் மக்களுக்கிடையில் சிநேகபூர்வமான  உறவை ஏற்படுத்தும் நோக்கில்,  இராணுவ சகாச விளையாட்டுக்களையும்  அபிவிருத்தி வேலைகளையும் முன்னெடுத்துவருவதாக புணாணை 233ஆவது இராணுவ முகாம் கட்டளைத்தளபதி நந்த கத்துருசிங்க தெரிவித்தார்.

கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும்; 29ஆம் 30ஆம் திகதிகளில் பிற்பகல்  02 மணியிலிருந்து  மாலை 06 மணிவரை  இலவச இராணுவ சாகசங்கள், கண்காட்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இராணுவத்தினரால் நடத்தப்படவுள்ளன.

இது தொடர்பில்  ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம்  கல்லடி இராணுவ முகாமில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றது.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'யுத்தத்தின் பின்னர் வட, கிழக்கில் இராணுவத்தினரின்; உதவியுடன் பாரிய அபிவிருத்திகள் மற்றும் மக்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு உதவிகளை முல்லைத்தீவு உட்பட  பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சம்பூரில் 60 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன, கண்ணிவெடி அகற்றுதல், 27,000 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் என்பன வழங்கப்பட்டும் பணிகளில் ஈடுபடுவதனால்  மக்கள் இராணுவம் மேல் கொண்டுள்ள பயத்தைப் போக்கும் நோக்கில் சமூகங்களுடன் இணைந்து பலவேறுபட்ட வேலைகளைச் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

கொழும்பில் மட்டும் நடத்திய சாகசங்களை தற்போது வடக்கு, கிழக்கில் நடத்த எண்ணி மட்டக்களப்பில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக அம்பாறை மற்றும் திருகோணமலையில் நடத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்வுகளில் இளைஞர் மற்றும் யுவதிகள் இராணுவத்துக்கு  சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இவர்கள் விரும்பினால், 15 வருட சேவைகளின் பின்பு இளைப்பாற்றுச் சம்பளம் பெறுவதோடு, தங்களின் சொந்தப் பிரதேசங்களில் வேலை செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். இராணுவப் படையில் சேர விரும்பினால்,  சாகச நிகழ்வுகள்  நடைபெறும் மைதானத்திலேயே  சேந்ந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X