2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு

Thipaan   / 2014 டிசெம்பர் 13 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தில் பதவி வகித்து ஓய்வுபெற்றுச் செல்லும் உதவிப்பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை (13) நடைபெற்றது.

கடற்றொழில் திணைக்களத்தில் கடற்றொழில் பரிசோதகராக இணைந்து பின்பு கல்முனை மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் 5 வருடங்கள் பின்பு மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தில் 15 வருடங்களாக உதவிப் பணிப்பாளராக சேவைபுரிந்துள்ளார்.
மாவட்ட கடற்றொழில் சம்மேளனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பொன்னாடை, பாராட்டுப்பத்திரங்கள், நினைவுச்சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், மாவட்ட கடற்றொழில் சம்மேளனங்களின் தலைவர் ஏ.சி.எம். முனைவர், சேவா லங்கா நிறுவகத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர்  கே. நாகராஜா, ஓய்வுபெற்ற றோட்டறிக் கழகத் தலைவர் கணக்காளர் எஸ். டேவிட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X